சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் சேதமடைந்து வருவதால், அதில் பயணிப்போர் அவதிப்படுகின்றனர்.
   கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. விட்டு, விட்டு பெய்து வரும் இந்த மழையால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. சாலைகளில் உள்ள சிறிய பள்ளங்களில் தேங்கும் தண்ணீரால் அந்தச் சாலைகள் மேலும் சேதமடைந்து வருகின்றன.
   ஏற்கெனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் கடுமையான சேதத்தை சந்தித்திருந்த நிலையில், அவைகளை பழுதுபார்க்கும் பணி கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிலையில், கடலூர் நகரப் பகுதியில் உள்ள சாலைகள் தற்போது மழைக்கு கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன. குறிப்பாக கடலூர் - புதுச்சேரி சாலையில் மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதுடன், பெரிய அளவிலான பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால், இந்தச் சாலையில் அவ்வப்போது கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, இந்தச் சாலையில் போக்குவரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
   எனவே, மழை ஓய்ந்த பின்னர் சேதமடைந்த இந்தச் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai