Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By  கடலூர்,  |   Published on : 02nd December 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் கடலூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கடலூர் தலைமை தபால் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ராஜா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் எஸ்.நம்புராஜன் சிறப்புரையாற்றினார்.
     மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், 40 சதவீதம் ஊனமுடையோருக்கு மாத உதவித்தொகை, நூறுநாள் வேலைத் திட்டத்தில் 4 மணி நேரம் வேலை வழங்கி முழுச் சம்பளம் வழங்குதல், கல்வியில் 5 சதவீதமும், வேலைவாய்ப்பில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு, சிறுதொழில் செய்திட மானியத்துடன் குறைந்தபட்ச வட்டியில் கடனுதவி, பெண் மாற்றுத் திறனாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கான புதிய சட்ட விதிகளை வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
     சங்கத்தின் மாவட்டச் செயலர் ஆர்.ஆளவந்தார், பொருளாளர் ராம.நடேசன், துணைத் தலைவர்கள் வி.கல்யாணசுந்தரம், எஸ்.தட்சணாமூர்த்தி, நிர்வாகி பி.அமர்நாத், தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai