Enable Javscript for better performance
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தள்ளி வைப்பு

    By  கடலூர்  |   Published on : 02nd December 2017 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தொடர் மழை காரணமாக தள்ளி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடலூர் பிரிவு சார்பில் சனிக்கிழமை (டிச.2) முதல் டிச.5-ஆம் தேதி வரை முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல், இறகுப் பந்து, மேசைப்பந்து, டென்னிஸ், கபடி, கால்பந்து, கூடைப்பந்து, கையுந்துப் பந்து, வளைகோல் பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் (இரு பாலருக்கும்) நடைபெற இருந்தன.
     தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.
     எனவே, இந்தப் போட்டிகள் தள்ளி வைக்கப்படுகின்றன. போட்டிகள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai