Enable Javscript for better performance
இயற்கை சீற்றம் தணிய வேண்டி வேள்வி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    இயங்கை சீற்றம் தணியவும், உலக அமைதி வேண்டியும் சிதம்பரம் அம்மாப்பேட்டை சக்திநகர் ஆதிபராசக்தி மன்ற வளாகத்தில் அண்மையில் வேள்வி பூஜை நடைபெற்றது .
    பூஜையை மாவட்ட பொருளாளர் வி.ஜெயபால் தலைமையில், மாவட்டச் செயலர் சி.பார்த்தசாரதி தொடக்கி வைத்தார். வட்டத் தலைவர் எஸ்.பாலக்குமார் வரவேற்றார். வேள்விபூஜையை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, மன்றத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. எஸ்.கமலநாதன், எஸ்.கார்த்திகேயன், வி.கண்ணன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.
    அன்னதான நிகழ்ச்சியை அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எஸ்.ஞானக்குமார் தலைமையில், பெரியப்பட்டு மன்றத் தலைவர் எஸ்.ஜெய்சங்கர் தொடக்கி வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai