சுடச்சுட

  

  நெய்வேலி, வடக்குத்து ரோட்டரி சங்கம், புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுôரி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாம், வடக்குத்து முல்லை மழலையர் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  முகாமிற்கு, வடக்குத்து ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.தனசேகரன் தலைமை வகித்தார். கோமதி தனசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விருத்தாசலம் ரோட்டரி மரம் வளர்ப்புத் திட்ட மாவட்டத் தலைவர் எம்.ரமேஷ் சந்த் கலந்துகொண்டார். சிறப்பு முதன்மை விருந்தினராக நெய்வேலி டிஎஸ்பி பி.வெங்கடேசன் கலந்துகொண்டு முகாமை தொடக்கி வைத்துப் பேசினார்.
  புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுôரி இருதய சிகிச்சை நிபுணர் ஏ.அருண்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பயனாளிகளுக்கு இருதய பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். வடக்குத்து ரோட்டரி சங்க சாசனத் தலைவர் கோ.ஜெகன், முன்னாள் தலைவர் சி.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ரோட்டரி முன்னாள் தலைவர்கள் டேவிட், எஸ்.ஏ.வெங்கடேசன், பவர்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலர் முருகேசன், முல்லை மழலையர் பள்ளி தாளாளர் ஆர்.உமாபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  முன்னதாக சிறப்பாக சேவை புரிந்த வடக்குத்து ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.தனசேகரன், அவரது துணைவியார் கோமதி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் வடக்குத்து ரோட்டரி சங்கச் செயலர் அழகுசெல்வம் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai