சுடச்சுட

  

  இளைஞர் உயிரிழந்த விவகாரம்: உண்மை நிலையை காவல் துறை விளக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 04th December 2017 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தாவட்டம், ஆனந்த் மரணம் தொடர்பாக மாவட்ட காவல் துறை விசாரணை நடத்தி, உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
  இதுகுறித்து அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீமுஷ்ணம் அருகே சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் ஆனந்த் (23). இவர் தீக் காயங்களுடன் இறந்தார் என்ற செய்தி வெளியானது. இது திட்டமிட்ட கொலை என சில அரசியல் கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியாகி இருந்தது. எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை கண்டறிவதற்காக ஞாயிற்றுக்கிழமை சாத்தாவட்டம் கிராமத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், கோ.மாதவன், வி.சுப்புராயன், காட்டுமன்னார்குடி வட்டச் செயலர் ஆர்.இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், கரும்பு விவசாயிகள் சங்த தலைவர் கே.ஆதிமூலம் ஆகியோர் சென்று கிராம மக்களிடமும் விசாரித்தோம்.
  இதில், உயிரிழந்த ஆனந்த் மீது யாரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகத் தெரியவில்லை. அவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக அறிய முடிகிறது. அருகில் உள்ளவர்கள் அவரை தடுத்தும் பலனளிக்கவில்லை என்பதையும் விசாரணையில் அறிய முடிகிறது.
  இந்த நிலையில் அவரது மரணத்தை சாதிய மோதலின் விளைவாக சித்திரிப்பது உண்மைக்கு மாறானது.
  இத்தகைய முயற்சி அப்பாவி மக்களிடையே சாதிய மோதலை உருவாக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் இழப்பை ஏற்படுத்தவே உதவி செய்யும்.
  இருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் எழும்பியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி, உண்மை விவரங்களை மக்களுக்கு தெரிவிப்பதுடன், விசாரணை அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai