சுடச்சுட

  

  தொடர் மழை காரணமாக மின் தேவை குறைந்துள்ளதால், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் மின் உற்பத்தி சுமார் 50 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 3 நிலக்கரி சுரங்கங்கள், 4 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
  முதல் அனல் மின் நிலையம் 600 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. இதேபோல, 1-ஏ அனல் மின் நிலையம் 420 மெகாவாட், 2-ஆவது அனல் மின் நிலையம் 1,470 மெகாவாட், 2-ஏ அனல் மின் நிலையம் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டவை.
  இவற்றின் மூலம் மொத்தம் 2,990 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மத்திய மின் தொகுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு பகிர்ந்து அனுப்பப்படுகிறது.
  தற்போது, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது மின் உற்பத்தியை சுமார் 50 சதவீதம் வரை குறைத்துள்ளது.
  இதுகுறித்து என்எல்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடை காலத்தில், மின் தேவை அதிகம் இருக்கும் என்பதால், மின் உற்பத்தி வழக்கமாக அதிகரிக்கப்படும். அதேபோல மழை, குளிர் காலங்களில் மின் தேவை குறைவாக இருக்கும் என்பதால் தற்போது மின் உற்பத்தியைக் குறைத்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, முதல் அனல் மின் நிலையத்தில் 50 மெகாவாட், 1-ஏ-வில் 360 மெகாவாட், 2-ஆவது அனல் மின் நிலையத்தில் 665 மெகாவாட், 2-ஏ-வில் 268 மெகாவாட் என மொத்தம் 1,343 மெகாவாட் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது வழக்கமான உற்பத்தியைக் காட்டிலும் 50 சதவீதம் குறைவு. என்எல்சி பங்கர்களில் சுமார் 5 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் உள்ளது. மழையால் மின் உற்பத்தியில் பாதிப்பு இல்லை என்றார் அவர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai