Enable Javscript for better performance
திட்டக்குடியில் மழைக்கு தாக்குப்பிடிக்காத சாலை- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடியில் தொடர் மழையால் அகரம் சீகூர் சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
    திட்டக்குடியில் இருந்து அகரம்சீகூர் செல்லும் சாலையானது பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கியச் சாலையாகும். தினந்தோறும் இந்தச் சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், அரசு, தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தச் சாலையை புதிதாக அமைக்கப்பட்டது.
    இருப்பினும், சில வாரங்களிலேயே பழுதான இந்தச் சாலை, தற்போது பெய்து வரும் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுமார் 1 கி.மீ. தொலைவு வரை சேதமடைந்துள்ளது.
    இதனால், இந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது சாலை குண்டும், குழியுமாக மாறி, மழைநீர் தேங்கி, குட்டைபோல காட்சி அளிக்கிறது.
    எனவே, போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லாத இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai