சுடச்சுட

    

    சிதம்பரம் நகரில் புதை சாக்கடை பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
    இந்த நகரில் புதை சாக்கடை விரிவாக்க திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுமையாக சீரமைக்கப்படாமல் உள்ளன. சிதம்பரம் தொப்பையான்தெருவைச் சேர்ந்தவர் சரஸ்வதி (75). இவர் சனிக்கிழமை இரவு கோட்டாயான்சந்தில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு திரும்பியபோது, வானக்காரத்தெருவுக்கும், கோட்டையான்சந்திற்கும் இடையே, புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளார்.
    ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்தபோது, அந்தப் பள்ளத்தில் இருந்த நீரில் மூதாட்டியின் சடலம் மிதந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கே.ஜெகதீசன் பார்வையிட்டார். சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai