சுடச்சுட

  

  பெலாந்துறை அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் தண்ணீர் திறப்பு

  By DIN  |   Published on : 04th December 2017 02:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெலாந்துறை அணைக்கட்டிலிருந்து வெள்ளாற்றில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது.
  பெண்ணாடம் அடுத்துள்ள பெலாந்துறையில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான நீர்த்தேக்கம் உள்ளது. கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் ஆணைவாரி ஓடை, உப்பு ஓடை, சின்னாறு வழியாக வெள்ளாற்றில் தண்ணீர் வருகிறது. அணைக்கட்டின் முழு கொள்ளளவான 6 அடியை எட்டியதை அடுத்து, பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் பாசன வாய்க்கால்களில் விநாடிக்கு 190 கனஅடி தண்ணீரும், மீதியுள்ள 2,003 கனஅடி உபரி நீர் வெள்ளாற்றிலும் திறந்து விடப்பட்டது.
  அணைக்கட்டிலிருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் அதனை பார்ப்பதற்காக பொதுமக்கள் திரளானோர் வந்து செல்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுவரை, தடுப்பணைகளின் மீது தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai