Enable Javscript for better performance
போபால் பேரழிவில் பாதித்தோருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை'- Dinamani

சுடச்சுட

    

    போபால் பேரழிவில் பாதித்தோருக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை'

    By DIN  |   Published on : 04th December 2017 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போபால் பேரழிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் கடலூரில் கூறினார்.
    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 1984-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். போபால் பேரழிவின் 33-ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி கடலூரில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு, சிப்காட் பகுதி சமுதாய சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள், தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, போபால் பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. சுற்றுச் சூழலியலாளர் தி.அருள்செல்வம் வரவேற்றார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் தொடக்க உரையாற்றினார். சிவசங்கர், ராமநாதன், அமிர்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தாமஸ், செம்மங்குப்பம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகந்நாதன், ஏஐடியுசி பொதுச் செயலர் எம்.சேகர், வாசிப்போர் இயக்கத் தலைவர் பால்கி உள்பட பலர் உரையாற்றினர்.
    இந்த நிகழ்ச்சியில் போபால் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யஷ்மின் பேசியதாவது: போபால் பேரழிவு அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டது. இதில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. ஆனால், தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேரழிவின் துயரத்தை தொடர்ந்து அனுபவித்து வருகிறோம். இங்கு பிறக்கும் குழந்தைகள் இன்னும் ஊனத்துடன் பிறக்கின்றன. உரிய மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றார் அவர்.
    மேலும் போபாலை சேர்ந்த சரிதா என்பவரின் உரை, காணொலிக் காட்சி மூலம் திரையிடப்பட்டது. அவர் பேசுகையில், போபால் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai