சுடச்சுட

  

  ஐயப்பப் பக்தர்கள் வாகனத்துக்கு சுங்கக் கட்டணம் ரத்து செய்யக் கோரிக்கை

  By  நெய்வேலி  |   Published on : 05th December 2017 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சபரிமலை செல்லும் ஐயப்பப் பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்தது.
   பண்ருட்டி இந்து மக்கள் கட்சியின் அவசர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தட்டாஞ்சாவடி காளியம்மன் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஆர்.எஸ்.தேவா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நாகராஜ், பண்ருட்டி நகரத் தலைவர் சாய்சுந்தரராமன், நகரச் செயலர் என்.கண்மணி, ஒன்றியத் தலைவர் எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
   மாவட்ட பொதுச் செயலர் ஆர்.சரவணன், மாநிலச் செயலர் ஜெ.சாமிநாதன், இளைஞரணிச் செயலர் என்.ஆர்.பரணிதரன், துணைத் தலைவர் க.ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
   கூட்டத்தில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai