சுடச்சுட

  

  ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் வலியுறுத்தினார்.
   தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடலூரில் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
   தமிழகம் முழுவதும் 254 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற சுமார் 2,500 மீனவர்கள் ஓக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஒக்கி புயலை தேசியப் பேரிடராக அறிவித்தால், சர்வதேச நாடுகளும் மாயமான மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் என்றார் அவர். தமிழகம், புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனர் தலைவர் பெரு.ஏகாம்பரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
   ஆர்ப்பாட்டத்தில், தவாக மாநில துணைப் பொதுச் செயலர் உ.கண்ணன், மாநில நிர்வாகக் குழு தி.கண்ணன், மாவட்டச் செயலர்கள் த.பஞ்சமூர்த்தி, முடிவண்ணன், சின்னதுரை, மாணவரணிச் செயலர் அருள்பாபு, மீனவர் வாழ்வுரிமை இயக்க பொதுச் செயலர் தி.தங்கேஸ்வரன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அருள்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   கட்சியின் தொகுதிச் செயலர் த.ஆனந்த் வரவேற்றுப் பேசினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai