சுடச்சுட

    

    தொடர் மழை காரணமாக, கல்லணையில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
     வடகிழக்குப் பருவ மழை காரணமாக, திருச்சி மாவட்டம், கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் உபரி நீர் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 9 அடியில், தற்போது 8 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
     இந்த நிலையில், கீழணைக்கு வரும் 7 ஆயிரம் கன அடியில், 5 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் டிச. 2-ஆம் தேதி இரவு முதல் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடக்குப் பகுதியில் 4 ஷட்டர்கள், தெற்குப் பகுதியில் 2 ஷட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இந்த தண்ணீருடன் மழை நீர் சுமார் ஆயிரம் கன அடி என மொத்தம் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai