சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடியில் மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரம்

    By  நெய்வேலி,  |   Published on : 05th December 2017 08:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிஞ்சிப்பாடி பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
     வடகிழக்குப் பருவ மழையின்போது குறிஞ்சிப்பாடி வட்டம் பாதிக்கப்படுவது வழக்கம். 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த பலத்த மழை, என்எல்சி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் ஊருக்குள் புகுந்ததில், அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிப்பாளையம், கல்குணம், பூதம்பாடி, ஓணாங்குப்பம் உள்ளிட்ட பல கிராமங்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த நிலையில், இந்த ஆண்டு குறிஞ்சிப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாள்களாகப் பெய்த தொடர் மழையால் குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் நிரம்பின. வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் உபரி நீர் அருகிலிருந்த வீடுகள், விவசாய நிலங்களை சூழந்தன.
     வடலூர் அய்யன் ஏரி நிரம்பியதால் கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் வழிந்தோடியது. இந்த தண்ணீரை பொக்லைன் இயந்திர உதவியுடன் செங்கால் ஓடைக்கு அதிகாரிகள் திருப்பி விட்டனர். கல்குணம் கிராமம், புதுநகர் காலனியை சூழ்ந்த நீர் மற்றும் வடந்தாங்கல் ஏரி உபரி நீரை வெளியேற்ற அங்கிருந்த வாய்க்காலை பொதுப் பணித் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி ஆழப்படுத்தினர். கல்குணம், ஓணாங்குப்பம் எல்லையில் வெள்ள நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பரவனாற்றில் உள்செல்லும் வழியை திறந்துவிட்டனர். இந்தப் பணிகளை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி, பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் மோகன்ராமன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai