சுடச்சுட

    

    கடலூர் நகரில் வடிகால் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
     கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையானது, கடலூர் நகரம் வழியாகச் சென்று கடலில் கலப்பதால், நகரிலுள்ள வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் நகரின் முக்கியப் பகுதியான புதுச்சேரி - கடலூர் சாலையில், பாரதி சாலையின் ஓரமாக உள்ள மழைநீர் வடிகால் கால்வாயை தூர்வாரிட முடிவு செய்தனர். இதையடுத்து, கடற்கரைச் சாலையிலிருந்து கெடிலம் ஆறு வரை உள்ள கால்வாயின் மேல் மூடிகளை அகற்றியும், சில ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றியும் வருவாய்த் துறையினர் பொக்லைன் உதவியுடன் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் வட்டாட்சியர் ப.பாலமுருகன் தலைமையில் இந்தப் பணி நடைபெற்றது.
     தூர்வாரப்பட்ட கால்வாய்களிலிருந்து அகற்றப்பட்ட கழிவுகள், உடைக்கப்பட்ட சிமென்ட் சிலாப்புகள் சாலையின் ஓரமாக விடப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்தால் இந்த கழிவுகள் அனைத்தும் கால்வாய்க்குள் சென்று அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், இந்தக் கழிவுகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, இந்தக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai