Enable Javscript for better performance
நெய்வேலியில் தேசிய பேரிடர் மீட்புப் படை- Dinamani

சுடச்சுட

    

    தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 40 பேர் நெய்வேலியில் முகாமிட்டுள்ளனர்.
     வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
     இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 40 பேர் பேரிடர் கால மீட்புக் கருவிகளுடன் அரக்கோணத்தில் இருந்து திங்கள்கிழமை நெய்வேலிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணி வரவேற்று, நெய்வேலி வட்டம் 29-இல் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைத்தார்.
     இதுகுறித்து குழுக் கமாண்டர் ராமசந்திர ஓலா கூறுகையில், எங்கள் குழுவினர் பேரிடர் காலத்தில் பாதிக்கப்படும் பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணியல் ஈடுபட தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai