சுடச்சுட

    

    பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

    By  கடலூர்,  |   Published on : 05th December 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, விருத்தாசலம் கோயிலில் விவசாயிகள் திங்கள்கிழமை நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     கடந்த 2015-16-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியால் விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது. இதில், விவசாயிகளால் 10 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, 8 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம், 25 ஆயிரம் ஏக்கரில் நெல் மற்றும் கம்பு முதலான பயிர்களுக்கு தனியார் நிறுவனம் வழியாக பயிர்க் காப்பீடு செய்யப்பட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கவில்லையாம்.
     எனவே, பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக வழங்கப்படாத கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     போராட்டத்துக்கு, தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர். இதையடுத்து, அங்குள்ள திருகொளஞ்சியப்பர் கோயிலுக்குச் சென்ற விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோயிலில் சீட்டு கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     போராட்டத்தில், அயன்குறிஞ்சிப்பாடி ராமலிங்கம் உள்பட திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai