பல்கலை.யில் பயிற்சி முகாம்
By சிதம்பரம், | Published on : 05th December 2017 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டில் சிரியோ' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம், பெங்களூரு நேஷனல் இண்ஸ்ட்ருமண்ட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய இந்த முகாமில், ஒருங்கிணைப்பாளர் மு.முகம்மது தமீம் அன்சாரி வரவேற்றார். முகாமை பொறியியல் புல முதல்வர் சி.அந்தோணி ஜெயசேகர் தொடக்கி வைத்தார்.
முகாமில் பங்கேற்ற ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பெங்களூரு நேஷனல் இண்ஸ்ட்ருமண்ட்ஸ் பொறியாளர்கள் பயிற்சியளித்தனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாம் நிறைவு விழாவில் மின்னணு மற்றும் கருவியியல் துறைத் தலைவர் டி.சிவக்குமார் பங்கேற்று சிறப்புரையாற்றினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மைய இயக்குநர் எம்.ராமசாமி சான்றிதழ்களை வழங்கினார். முனைவர் தி.சு.முருகேஷ் நன்றி கூறினார்.