Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். பெறப்பட்ட மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குள்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டுமென அலுவலர்களை ஆட்சியர் அறிவுறுத்தினார்.
     கடந்த ஆண்டு திட்டக்குடி வட்டம், தி.இளமங்கலத்தைச் சேர்ந்த தென்னரசன் மகன் மாதவன் என்பவர் மரத்தில் ஏறியபோது அருகிலுள்ள மின்சாரக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு, வருவாய்த் துறை சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, தனித் துணை ஆட்சியர்கள் கூஷ்ணாதேவி (ச.பா.தி), சேதுராமன் (முத்திரைத்தாள்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜி.ராமு, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai