மதுக் கடையில் திருட்டு
By நெய்வேலி, | Published on : 05th December 2017 08:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பண்ருட்டி அருகே அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுப் புட்டிகள் திருடப்பட்டன.
பண்ருட்டி வட்டம், பக்கிரிப்பாளையம் அருகே கடலூர் பிரதான சாலையில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இதன் மேற்பார்வையாளராக சங்கர் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிச் சென்றனர். திங்கள்கிழமை காலை அந்த வழியாகச் சென்றவர்கள், கடைக் கதவின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடப்பதாக சங்கருக்கு தகவல் அளித்தனர். பண்ருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இரவு நேரத்தில் கடையை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த பணம், மதுப் புட்டிகளை திருடிச் சென்றது தெரியவந்தது.