சுடச்சுட

  

  பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத 3-ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   இந்தக் கோயிலில் கார்த்திகை மாத முதல் மற்றும் இரண்டாம் சோமவார விழா நடைபெற்ற நிலையில், 3-ஆவது சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
   இதனை முன்னிட்டு, மதியம் 3 மணிக்கு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
   சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.
   மாலை 7 மணிக்கு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் உலா வந்தனர். திரளான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai