சுடச்சுட

  

  வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்பட்டது.
   திட்டக்குடி அருகே உள்ள கீழச்செருவாயில் வெலிங்டன் நீர்த் தேக்கம் உள்ளது. இதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரியின் 14 துணை ஏரிகள் மூலம் 14 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நீர்த் தேக்கமானது 2016-ஆம் ஆண்டில் ரூ.6.41 கோடியில் கரை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்டது. மேலும், கரையின் இருபுறமும் சுற்றுச் சுவர் அமைத்து கரையில் பொழியும் மழைநீர் வடிவதற்காக வடிகால் வசதி, தார் சாலையும் அமைக்கப்பட்டது.
   இந்த நிலையில், வெலிங்டன் கோனகரையில் சுமார் 50 மீட்டர் அளவுக்கு கரையின் ஒருபகுதி திங்கள்கிழமை திடீரென உள்வாங்கியது. இதனால் முழு கொள்ளளவான 30 அடிக்கு தண்ணீர் தேக்கினால் கரை உடையும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள், 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ள அபாயத்தில் உள்ளனர்.
   இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் ராமகிருஷ்ணன், விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் சேதமடைந்த கரைப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து விரிசலான கரைப் பகுதியை பொக்லைன் இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், வரும் நாள்களில் பலத்த மழை பெய்தால் வெலிங்டன் நீர்த் தேக்கத்துக்கான தண்ணீர் வரத்து வரும் ஓடைகளான வெங்கனூர், அதர்நத்தம் ஓடையில் நீர் வரத்து அதிகமாகும். ஆனால், இந்த ஓடைகளில் வரும் தண்ணீரை மறிக்க வழியில்லாததால், பொதுப் பணித் துறை அதிகாரிகள் தற்போது கரையை சீர்செய்து வருகின்றனர்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai