சுடச்சுட

  

  வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ்: ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் முடிவு

  By  நெய்வேலி,  |   Published on : 05th December 2017 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது தொடர்பாக, என்எல்சி இந்தியா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்குவதென என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது.
   இந்தச் சங்கத்தின் பேரவைக் கூட்டம், வட்டம் 24-இல் உள்ள ஏஐடியுசி அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ராச உக்கரவேல் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.வெங்கடேசன் நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரம்குறித்து விளக்கினார்.
   கூட்டத்தில், என்எல்சி-யில் பணியாற்றும் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி நிரந்தரப்படுத்த வேண்டும். மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்துடன், நீதிமன்ற உத்தரவு மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற ஊதியத்தை பிடித்தமின்றி வழங்க வேண்டும்.
   சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு வேலையும், வேலை நீக்க காலத்துக்கான பலன்களையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, 11.12.2017 அன்று என்எல்சி நிர்வாகத்திடம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக நோட்டீஸ் வழங்குவது என தீர்மானித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai