சுடச்சுட

    

    உயர் கோபுர மின் விளக்குகளில் பழுது: இருள் சூழ்ந்த பண்ருட்டி பேருந்து நிலையம்

    By  நெய்வேலி,  |   Published on : 06th December 2017 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
     பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கும்பகோணம், வேலூர், புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
     ஆனால், பேருந்து நிலையத்தில் உள்ள உயர் கோபுரத்தில் மின் விளக்குகள் கடந்த சில நாள்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். குற்றச் செயல்களுக்கும் வாய்ப்பாகிறது. இதேபோல, அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் மற்றும் விசாரணை அலுவலகம், புறக் காவல் நிலையம் ஆகியவற்றிலும் மின் விளக்குகள் எரியவில்லை.
     எனவே, பயணிகள் நலன் கருதி, பேருந்து நிலையத்தில் உயர்கோபுர மின் விளக்குகளை சரிசெய்து எரிய வைக்க பண்ருட்டி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai