சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
   இந்தப் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட அங்கங்கள் 32, 22, 06 சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, எய்ட்ஸ் நோய் பற்றியும், தடுப்பு முறை, சிகிச்சை முறை, பாகுபாடு பற்றிய ஒரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைப்பெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செüந்தரபாண்டியன், கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மேலாளர் கே.கதிரவன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். திட்ட அலுவலர் ஏ.தெய்வீகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
   திட்ட அலுவலர் என்.காயத்ரி, கே.கதிரவன் ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்தும், அதன் பின்விளைவுகள், சிகிச்சை முறைகள், தடுப்பு முறைகள், களங்கம் மற்றும் பாகுபாடு பற்றி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
   நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோயாளிகள் பங்கேற்று, நோயின் தாக்கம், வாழ்நாள் பதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். திட்ட அலுவலர் கே.தமிழ்மாறன் நன்றி கூறினார். கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai