Enable Javscript for better performance
உலக மண் வள தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாகிராமம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், உலக மண் வள தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், சொற்ப எண்ணிக்கையிலான விவசாயிகளே கலந்துகொண்டனர்.
     மண்ணின் மகத்துவத்தை அனைவரும் அறியவும், இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் டிச.5-ஆம் தேதி சர்வதேச உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது.
     அதன்படி, கடலூர் மாவட்ட வேளாண்மைத் துறை, இன்டர்நேஷனல் லிட் கோரமண்டல் உர நிறுவனம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான உலக மண் வள தின விழா, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     விழாவுக்கு, வேளாண்மை இணை இயக்குநர் நட்ராயன் தலைமை வகித்தார். துணை இயக்குநர் கனகசபை, உதவி இயக்குநர்(தரக் கட்டுப்பாடு) பாலசுப்பிரமணியன், பேராசிரியர் துரைசாமி, வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா, வேளாண்மை அலுவலர் சுரேஷ், துணை அலுவலர்கள் சண்முகசுந்தரம், உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னதுரை, பாஸ்கல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     சொற்ப எண்ணிக்கையில் விவசாயிகள்
     பங்கேற்பு: இந்த விழாவில், விவசாயிகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்துகொண்டனர். விழா குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் உரிய முறையில் தகவல் தெரிவிக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
     இதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறுகையில், பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை செய்திருந்ததால், விழா நடத்துவது குறித்து முதலில் குழப்பமான நிலை இருந்தது. பின்னர், உடனடியாக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் விவசாயிகள் அனைவருக்கும் தகவல் அளிக்க முடியவில்லை என்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai