கூட்டுறவு பண்டகசாலையில் ஆட்சியர் ஆய்வு
By கடலூர், | Published on : 06th December 2017 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, கடலூரில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக ஏடிஸ் கொசுப்புழு இருக்குமிடத்தை கண்டறியும் வகையில், உபயோகமற்ற பொருள்களான டயர், டீ கப் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடலூரில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, அலுவலகத்திலிருந்த உபயோகமற்ற பேரல்களை அப்புறப்படுத்தவும், மேல்மாடியில் உள்ள தண்ணீர் சேமிக்கும் தொட்டியை சுத்தமாக பராமரிப்பதோடு தினந்தோறும் குளோரினேஷன் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி, துணைப் பதிவாளர் க.சுந்தர், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் தனராஜா, நகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் உடனிருந்தனர்.