Enable Javscript for better performance
சிதம்பரம் நகரச் சாலைகளை சீரமைக்க பாஜக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நகரச் சாலைகளை சீரமைக்க பாஜக வலியுறுத்தல்

    By  சிதம்பரம்,  |   Published on : 06th December 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் நகரச் சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென பாஜக வலியுறுத்தியது.
     இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி பொருளாளர் கோபிநாத் கணேசன், சிதம்பரம் கோட்டாட்சியர் சி.ராஜேந்திரன் (படம்), நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கே.ஜெகதீசன் ஆகியோரிடம் அளித்த மனு விவரம்: சிதம்பரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணி தொய்வாக நடைபெறுவதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக உள்ளன.
     எனவே, நகரில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். மேலும், நகரில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரியவில்லை. பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு வாரத்துக்குள் இந்தப் பணிகள் நடைபெறாவிடில் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai