Enable Javscript for better performance
சேதமடைந்த மணிலா பயிர்கள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சேதமடைந்த மணிலா பயிர்கள்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு

    By  நெய்வேலி,  |   Published on : 06th December 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த மணிலா பயிர்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
     குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ராஜாகுப்பம், நெத்தனாங்குப்பம், பொன்வெளி, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மீனாட்சிப்பேட்டை, கண்ணாடி, ஆடூர் அகரம் உள்ளிட்டப் பகுதிகளில் சுமார் 1,500 ஹெக்டர் பரப்பளவில் கார்த்திகை பட்ட மணிலா விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
     இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழை காரணமாக, குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் விதைப்பு செய்திருந்த மணிலா பயிர்கள், உரிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.
     இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் சின்னபொண்ணு, வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, உதவி வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட மணிலா வயல்களை விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
     பின்னர், வேளாண்மை உதவி இயக்குநர் சின்னபொண்ணு விவசாயிகளிடம் கூறுகையில், மணிலா பயிர்கள் சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயறு வகைகளை விதைப்பு செய்யும்படியும், மானிய விலையில் உளுந்து விதை வழங்குவதாகவும் விவசாயிகளிடம் தெரிவித்தார். அப்போது, குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் உடனிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai