சுடச்சுட

    

    ஜெயலலிதா முதலாமாண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

    By  கடலூர்/சிதம்பரம்/நெய்வேலி  |   Published on : 06th December 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினரால் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
     கடலூர் நகர அதிமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே ஜெயலலிதாவின் உருவப்படம் அமைக்கப்பட்டு நகரச் செயலர் ஆர்.குமரன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், ஆர்.வி.மணி, ஜெ.அன்பு, ஜி.ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன் நிர்வாகிகள் வெங்கட்ராமன், ஜெயபால் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். இதேபோல 36 வார்டுகளிலும் ஜெயலலிதா உருவப்படம் அமைக்கப்பட்டு கட்சியினர் மரியாதை செலுத்தினர். திட்டக்குடி, ராமநத்தம், வேப்பூர், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. நல்லூர் ஒன்றியப் பகுதிகளில் ஒன்றியச் செயலர் டி.எம்.பச்சமுத்து தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
     பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவினர், பின்னர் சென்னையில் நடைபெற்ற நினைவு பேரணியில் பங்கேற்க வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் 10 ஆயிரம் பேர் இந்தப் பேரணியில் பங்கேற்பதாகச் சென்றதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
     விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு, கடைவீதி, தென்கோட்டை வீதி ஆகிய இடங்களில் தினகரன் அணி சார்பாக ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ராஜசேகர், கேப்டன் காமராஜ், நடராஜன், சண்முகம் ரத்தினராஜன், அருளாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
     சிதம்பரம்: சிதம்பரம் மேலரத வீதியில் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள், அதிமுகவினர் சார்பில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வார்டு செயலர் டி.கே.வேம்பு, மாவட்ட பிரதிநிதி கே.நாகராஜன், தன.ராஜேந்திரன், செல்லபாண்டியன், ஆர்.ரவீந்திரன், மார்க்கெட் ராஜி, ராமலவிங்கம், பாலு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     நெய்வேலி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் அதிமுகவினர் அமைதிப் பேரணி நடத்தி அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நெய்வேலி நகரக் கழகம் சார்பில் வட்டம் 9-இல் எம்ஜிஆர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான சொரத்தூர் ரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை இரவு மலர் தூவி மரியதை செலுத்தினார். நிகழ்வில், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு துணைத் தலைவர் ரா.ராஜசேகர், நகர அவைத் தலைவர் க.வெற்றிவேல், செயலர் கோவிந்தராஜ், அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத் தலைவர் பி.அபு, செயலர் ஆர்.உதயகுமார், பொருளாளர் தேவானாந்தன், அலுவலகச் செயலர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடியில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் சொரத்தூர் ரா.ராஜேந்திரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பண்ருட்டி ஒன்றியக் கழகம் சார்பில், காடாம்புலியூர் பேருந்து நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்
     படத்துக்கு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேவநாதன் தலைமையில் நிர்வாகிகள் பலர்
     மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
     பண்ருட்டி: பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு, பண்ருட்டி முன்னாள் நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமையில், அவைத் தலைவர் ராஜதுரை, மாவட்ட பொருளாளர் ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைதிப் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
     அண்ணாகிராமம் ஒன்றியம், திருமலைநகரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு ஒன்றியச் செயலர் என்.டி.கந்தன் தலைமையில் நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai