Enable Javscript for better performance
டிச.8-இல் நியாய விலைக் கடை பணியாளர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    டிச.8-இல் நியாய விலைக் கடை பணியாளர்கள் போராட்டம்

    By  சிதம்பரம்,  |   Published on : 06th December 2017 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் வருகிற 8-ஆம் தேதி தர்னா போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
     இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலர் கோ.ஜெயச்சந்திரராஜா சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நியாயவிலைக் கடைகளுக்கான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் எடை வைத்து லாரியில் ஏற்றப்படுவதில்லை.
     இதனால், நியாய விலைக் கடை பணியாளர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மேலும், கட்டாய இறக்கு கூலி, இபிஎப் பணம் கட்டுதல், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பயன் வழங்குதல், வேப்பூர் வட்ட வழங்கல் அலுவலரின் பணியாளர் விரோதப் போக்கை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வருகிற 8-ஆம் தேதி தர்னா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.பி.கருப்பையா தலைமை வகிக்கிறார்.
     அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளன சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கண்டன உரையாற்றுவதாக அவர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai