Enable Javscript for better performance
நில அளவீடு தொடர்பான வழக்கு: வட்டாட்சியர் உள்பட 3 பேருக்கு பிடி ஆணை- Dinamani

சுடச்சுட

    

    நில அளவீடு தொடர்பான வழக்கு: வட்டாட்சியர் உள்பட 3 பேருக்கு பிடி ஆணை

    By  கடலூர்,  |   Published on : 06th December 2017 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நில அளவீடு தொடர்பான வழக்கில், வேப்பூர் வட்டாட்சியர் உள்பட 3 பேருக்கு திட்டக்குடி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பிடி ஆணை பிறப்பித்தது.
     கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டத்துக்கு உள்பட்ட எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி லட்சுமி. இவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்தை அளவீடு செய்வது தொடர்பாக வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு மனு அளித்தனராம். பின்னர் வேப்பூர் வட்ட நில அளவையரையும் சந்தித்து முறையிட்டும் காலம் தாழ்த்தி வந்த நிலையில், லட்சுமி திட்டக்குடியில் உள்ள மாவட்டக் குற்றவியர் நடுவர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்குத் தொடுத்தார்.
     வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு ஆஜாராகக் கோரி வேப்பூர் வட்டாட்சியர், நில அளவையர் சுபாஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விஷ்ணுராஜ் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து பலமுறை அழைப்பாணைகள் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, வழக்கில் ஆஜராகாத 3 பேருக்கும் பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai