சுடச்சுட

    

    பண்ருட்டியில் நாளை 5 கோயில்களில் கும்பாபிஷேகம்

    By  நெய்வேலி,  |   Published on : 06th December 2017 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி நகரில் 5 கோயில்களில் வியாழக்கிழமை (டிச.7) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
     பண்ருட்டி வ.உ.சி. தெருவில் அமைந்துள்ள இடம்புரி விநாயகர், பெரியாண்டவர் கோயில், அவ்வையம்பாளையம் தெருவில் அமைந்துள்ள காமன் கோயில், சத்தியமூர்த்தி தெருவில் அமைந்துள்ள கருமாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில் ஆகிய 5 கோயில்களில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
     சத்தியமூர்த்தி தெரு அய்யனார் கோயிலில் யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம், எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai