Enable Javscript for better performance
பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு- Dinamani

சுடச்சுட

    

    பயிர்க் காப்பீட்டுத் தொகை கோரி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

    By  சிதம்பரம்,  |   Published on : 06th December 2017 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, முற்றுகைப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்தனர்.
     சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் விவசாய சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
     கூட்டத்துக்கு, கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். வர்த்தர் சங்கத் தலைவர் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன், தங்க கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
     வாண்டையார்யிருப்பு செல்வகுமார், வெள்ளூர் லட்சுமிகாந்தன், விவசாயிகள் பூலாமேடு சரவணன், ஆசைத்தம்பி, பாலசுந்தரம், அசோகன், திருமேனி, பழனிசாமி, கஜேந்திரன், உதயகுமார், சுப்பிரமணியன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், 2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டு தொகையை உடனடியாக அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட நேரடி நெல்விதைப்பு, சம்பா பயிர்கள் குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 12-ஆம் தேதி குமராட்சியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி குமராட்சி காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai