சுடச்சுட

    

    பயிற்சி நிறைவு செய்த 49 உதவி ஆய்வாளர்களுக்கு பணியிடம்

    By  கடலூர்,  |   Published on : 06th December 2017 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிற்சி முடித்த 49 சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு, உதவி ஆய்வாளர்களுக்கான பணியிடம் வழங்கப்பட்டது.
     தமிழகக் காவல் துறையில் முதுநிலை காவலர்களாக குறிப்பிட்ட ஆண்டு பணியாற்றுபவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்படும். இந்தப் பதவி உயர்வு பெற்றவர்களில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோருக்கு, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு, பின்னர் உதவி ஆய்வாளர்களாக காவல் நிலையங்களில் பொறுப்பு வழங்கப்படும்.
     அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 49 பேர் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 3 மாதங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், காவல் நிலைய நிர்வாகம், விசாரணை குறிப்பெடுத்தல் உள்ளிட்ட பயிற்சிகளை 3 மாதம் பெற்றனர்.
     இந்த நிலையில், பயிற்சி நிறைவு பெற்றவர்களை உதவி ஆய்வாளர்களாக காவல் நிலையங்களுக்கு பொறுப்பேற்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 49 பேரும் காவல் நிலையங்களில் உடனடியாக பொறுப்பேற்கிறார்கள்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai