சுடச்சுட

    

    மாயமான மீனவர்களை மீட்க ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

    By  கடலூர்,  |   Published on : 06th December 2017 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி, குறிஞ்சிப்பாடி எம்எல்ஏ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
     கடலூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி, கேரளம் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் ஒக்கி புயலில் சிக்கி மாயமாகினர். இதில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் ராசாப்பேட்டை, சோனங்குப்பம், சின்னூர் ஆகிய கிராம மீனவர்களின் குடும்பத்தினரை சந்திக்க குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை அங்கு சென்றார். அங்கு மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
     பின்னர் அவர் கடலூரில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், ராசாப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த மு.ராஜ் (35), வை.முருகன் (35), கா.புலேந்திரன் (50), ரா.சுகுராஜ் (32), கோ.முருகவேல் (48), நா.அரிகிருஷ்ணன் (59), சோனங்குப்பம் கிராமம் சி.ரமேஷ் (42), சின்னூர் தெற்கு கிராமம் க.கோவிந்தராஜ் (37), கா.சங்கர் (40), கு.காமராஜ் (36), செ.ராமையன் (53), செ.குமார் (52), கு.ராமையா (55) ஆகியோரை காணவில்லையென அவர்களது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
     காணாமல் போனவர்களை மீட்க அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
     பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கூறியதாவது:
     புயல் குறித்து மத்திய-மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை செய்யவில்லை. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். சிப்காட் தொழிற்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்த நிறுவனங்கள் தங்களது சமூகப் பொறுப்புணர்வு நிதியிலிருந்து செய்ய வேண்டும். மழையால் இறந்த 4 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அவர்.
     அப்போது, தேர்தல் பணிக்குழு செயலர் இள.புகழேந்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் தமிழரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai