சுடச்சுட

  

  கடலூரிலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது.
   அந்தக் கட்சியின் கடலூர் கிழக்கு, மேற்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் கடலூர் முதுநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகிக்க, வடக்கு மாவட்டச் செயலர் இரா.ஆறுமுகம், தெற்கு மாவட்டச் செயலர் அ.செ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார்.
   கூட்டத்தில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று ஒக்கி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் அசோக்குமார், துணைத் தலைவர் முத்து.வைத்திலிங்கம், இளைஞரணி துணைச் செயலர் கோ.சந்திரசேகரன், மாவட்ட அமைப்புச் செயலர் பி.வெங்கடேசன், தலைவர்கள் எம்.ராஜ்குமார், ராஜசேகர், இளைஞரணி தலைவர் வாட்டர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரச் செயலர் எஸ்.பழனிவேல் நன்றிகூறினார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai