சுடச்சுட

  

  வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு

  By  நெய்வேலி,  |   Published on : 06th December 2017 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெளர்ணமியையொட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
   இந்தக் கோயிலில் பெளர்ணமியையொட்டி பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வருவர். இந்த நிகழ்வின்போது திருவதிகை அப்பர் இல்லம் அறக்கட்டளை சார்பில் கோயில் வளாகத்தில் பாரத நாட்டியம், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 64-ஆவது நிகழ்ச்சியாக, கார்த்திகை மாத பெüர்ணமி நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் சக்திகணபதி தலைமை வகித்தார். தொழிலதிபர் வைரக்கண்ணு முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற டிஎஸ்பி விஜயக்குமார் வரவேற்றார்.
   சிறப்பு விருந்தினராக பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், தொழிலதிபர் சீனுவாசன் ஆகியோர் கலந்துகொண்டு இயல், இசை, நாட்டிய மாணவிகளை கெüரவித்தனர். ராமகிருஷ்ணன் தேவாரப் பாடல்களை இசைத்தார். இரண்டாம் வகுப்பு மாணவர் வருண் வயலின் வாசித்தார். அபிநயா நாட்டியாலயா, கலைச்சோலை மாணவிகள் தரணி, பவானி, பவித்ரா ஆகியோர் பாரத நாட்டியம் நிகழ்த்தினர்.
   சிறப்புப் பேச்சாளராக கோயம்புத்தூர் ராம.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று, "நாளைப்போவேன்' என்ற தலைப்பில் நந்தனர் சரிதம் பற்றி பேசினார். இறுதியில் வரதன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மூர்த்தி செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai