சுடச்சுட

  

  25 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

  By  கடலூர்,  |   Published on : 06th December 2017 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் புதன்கிழமை (டிச.6) சிறப்பு கிராம சபைக் கூட்ட நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
   கடலூர் மாவட்டத்திலுள்ள 25 ஊராட்சிகளில், 2016-17-ஆம் ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் செயல்பாடுகளை சமூக தணிக்கை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன்படி, கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொடுக்கன்பாளையம், காரைக்காடு, காரணப்பட்டு, அண்ணாகிராமம் ஒன்றியத்தில் எய்தனூர், பண்ருட்டி ஒன்றியத்தில் அரசடிக்குப்பம், கீரப்பாளையம் ஒன்றியத்தில் கூலாப்பாடி, வடஹரிராஜபுரம், கூ. மணலூர், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் ஆண்டார்முள்ளிப்பள்ளம், கம்மாபுரம் ஒன்றியத்தில் பழையப்பட்டினம், மருங்கூர், விருத்தாசலம் ஒன்றியத்தில் கார்நத்தம், குப்பாநத்தம், கா.இளமங்களம், கொடுக்கூர், மணவாளநல்லூர், நல்லூர் ஒன்றியத்தில் எறையூர், அ. அகரம், கோவிலூர், கொத்தட்டை, மங்களூர் ஒன்றியத்தில் தா.ஏந்தல், பட்டூர், மேல்புவனகிரி ஒன்றியத்தில் அழிச்சிக்குடி, காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் குணவாசல்,
   கொண்டசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளில் புதன்கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வேண்டுகோள் விடுத்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai