சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தற்போதைய கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர், பள்ளிக் கல்வித் துறையின் நாள்காட்டியின் படியான வேலை நேரம் காலை 9.30 மணி முதல் 4.35 மணி வரையிலான நேரத்துக்குப் பதிலாக, ஆசிரியர்களை காலை 9.10 மணிக்கு வருகை தருமாறு வற்புறுத்துகிறாராம். அவ்வாறு வருகை தராத ஆசிரியர்களை திடீர் ஆய்வு என்ற பெயரில் தற்செயல் விடுப்பு, வருகை இல்லை என்று பதிவு செய்து சம்பளம் பிடித்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறாராம். இதுதொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிட்டபோது, பள்ளிக் கல்வித் துறையின் காலஅட்டவணைப்படி வகுப்புகளை நடத்திட முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு எதிராகச் செயல்பட்டு வருகைப் பதிவேட்டில் தற்செயல் விடுப்பாக முதன்மைக்கல்வி அலுவலர் பதிவு செய்து வருகிறாராம்.
   அவரது இத்தகைய செயலைக் கண்டிப்பதாகக் கூறி, கடலூர் மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழக தமிழாசிரியர் கழக முன்னாள் மாநில பொதுச் செயலர் இரா.வெங்கடேசன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநிலத் தலைவர் வே.மணிவாசகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பெ.இளங்கோவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
   ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் சு.ஜெயராமன், சு.விஜயகுமார், ஜெ.மக்தூம்உசேன், வீ.செல்வராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இரா.எல்லப்பன் வரவேற்க, க.குமரவேல் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai