சுடச்சுட

  

  மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

  By  கடலூர்,  |   Published on : 08th December 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்து வருவதாக ஊ.மங்கலம் கிராமத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர்.
   விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் கிராமத்தினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுலவகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஊ.மங்கலம் கிராமத்தில் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையின் வடக்குப் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊ.மங்கலம் ரயில்வே சாலை தொடங்கி நெடுஞ்சாலை வரையுள்ள இடங்களிலிருந்து வரும் மழைநீர், கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக ஓடி ஓடையில் கலக்கும் விதமாக ஏற்கெனவே மழைநீர் வடிகால் வாய்க்கால் இருந்தது.
   நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக இந்த வாய்க்காலை மண்ணால் மூடியபோது கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தோம். அப்போது, சாலைப் பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வாய்க்கால் அமைத்துத் தரப்படுமென உறுதியளிக்கப்பட்டது. ஆனால், பணி முடிந்த பின்னர் வாய்க்கால் அமைக்க முடியாதெனவும், அது மாவட்ட நிர்வாகத்தின் பணியெனவும் கூறி விட்டனர்.
   இந்த நிலையில் சாலையோரமாக வசிப்பவர்கள் தண்ணீர் ஓடிய வாய்க்காலை ஆக்கிரமித்து கடைகள், கட்டடங்கள் கட்டி விட்டனர். இதனால், மழைநீர் வடிந்துச் செல்ல வழியில்லாமல் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
   எனவே, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 10 மீட்டர் அகலம் கொண்டதாக ஓடை வரை வாய்க்காலை அமைத்துத் தர வேண்டுமென அந்த மனுவில் கோரியுள்ளனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai