சுடச்சுட

    

    இயற்கை விவசாயத்துக்கு கால்நடை வளர்ப்பே அடிப்படை என்றார் வேளாண்மை இணை இயக்குநர் ரா.நாட்ராயன்.
    கடலூர் செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், நபார்டு வங்கி சார்பில் விவசாயிகளுக்கான கறவை மாடு வளர்ப்பு குறித்த 3 நாள் பயிற்சி முகாம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நபர்களுக்கு நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
    பயிற்சி தொடக்க விழாவுக்கு வேளாண்மை இணை இயக்குநர் ரா.நாட்ராயன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை கால்நடை வளர்ப்புத்தான். தற்போது பொதுமக்களிடம் இயற்கை விவசாயம், ரசாயனக் கலப்பற்ற உணவுப் பொருள்கள் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் நாட்டுப் பசுக்களை வாங்கி வளர்க்க விவசாயிகள் முன்வர வேண்டும். நாட்டு பசுக்களின் பால் விலையானது, வெளிநாட்டு ரக மாடுகளின் பாலின் விலையை விட அதிகம். எனவே, உள்நாட்டு ரக மாடுகளைக் கண்டுபிடித்து வளர்க்க வேண்டும்.
    மாட்டுக்கு வைக்கோல் போன்றவற்றுடன் உளுந்து, மணிலா இலைகளையும் சேர்த்து வழங்கினால் கூடுதல் பால் கிடைக்கும். நாட்டுப் பசு மாட்டின் ஒரு கிராம் சாணத்தில் நல்ல பாக்டீரியாக்கள் சுமார் 400 கோடி வரை உள்ளன. அதனை வயலில் இடுவதன் மூலம் நல்ல உரத்தின் பலனைப் பெற முடியும் என்றார் அவர்.
    தாட்கோ துணை ஆட்சியர் பி.ராஜலட்சுமி சிறப்புரையாற்றினார். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் கு.குபேந்திரன் தொடக்க உரையாற்றினார். முன்னதாக உதவிப் பேராசிரியர் ப.சிலம்பரசன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, மாடு வளர்ப்பு, தீவன முறை, நோய்த் தடுப்பு முறை, இனப்பெருக்கம், கறவைப் பருவம், நிதி மற்றும் காப்பீடு உள்ளிட்ட தலைப்புகளில் உதவிப் பேராசிரியர்கள் பி.முரளி, ப.சிலம்பரசன், கால்நடை உதவி சர்ஜன் ஏ.ஸ்டாலின் வேதமாணிக்கம், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ஆர்.வாசுதேவன் ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும், திண்டிவனத்திலுள்ள நாட்டு மாடு பண்ணைக்கு விவசாயிகள் கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai