Enable Javscript for better performance
உதவித்தொகை கோரி 5 ஆண்டுகளாக போராடும் மூதாட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    முதியோர் உதவித்தொகை கோரி 7 மூதாட்டிகள் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடையாய் நடந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    செஞ்சி வட்டம் மேல்ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுள்ளி(65), முனியம்மாள்(65), காசியாம்மாள்(64), காந்தா(66), மண்ணம்மாள்(66), ஏக்கம்மாள்(67) ஆகியோர் முதியோர் உதவித் தொகை கோரி தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். இதில் சுள்ளி என்ற மூதாட்டி முதியோர் உதவித்தொகையை கடந்த 4 ஆண்டுகளாக பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென கடந்த 4 மாதங்களாக நிறுத்தி விட்டனராம்.
    வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் தங்களுக்கு கடைசி கால வாழ்க்கை நிம்மதியில்லாமல் உள்ளதாகவும்,அனைத்துத் தகுதிகள் இருந்தும் தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க மறுக்கப்படுவதாகவும் இவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    மேலும் கடந்த 5 ஆண்டுகளாக 7 தனி வட்டாட்சியர்கள் மாற்றலாகிச் சென்றுள்ளனர். ஒவ்வொரு முறையும் தனி வட்டாட்சியர் பணி மாறும்போது புதிய மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மூதாட்டிகள் அனைவரும் வெள்ளிக்கிழமை தனி வட்டாட்சியரிடம் சென்று கேட்டபோது, கணினியில் உங்கள் பெயரை பதிவு செய்துள்ளோம். சீனியாரிட்டிபடிதான் வரும் என தெரிவித்ததாக மூதாட்டிகள் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai