சுடச்சுட

  

  கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, கடலூரில் விவசாயிகள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.
  கரும்பு விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஆதார விலைப்படி, சர்க்கரை ஆலைகள் 2013 முதல் 2017-ஆம் ஆண்டு வரை நிலுவைத் தொகையாக ரூ.1,630 கோடி வழங்க வேண்டியுள்ளது. இந்தத் தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.
  நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.170 கோடியை வழங்க வேண்டும். 2017-18-ஆம் ஆண்டின் கரும்பு அரவைப் பருவத்துக்கு டன்னுக்கு ரூ.4,000 என விலை நிர்ணயம் செய்ய வேண்டும். எடை முறைகேட்டை தடுத்து அரசே எடை மேடையை அமைத்துத் தர வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
  மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து தொடங்கிய பேரணிக்கு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.தென்னரசு தலைமை வகித்தார். பேரணி புதுவை சாலை வழியாகச் சென்று கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே நிறைவுற்றது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கோ.மாதவன், செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
  ஆலை மட்ட நிர்வாகிகள் கே.ஆதிமூலம், ஆர்.மாணிக்கவேல், ஜி.சக்திவேல், எம்.மணி, எஸ்.நாராயணசாமி, எஸ்.தம்புசாமி, கே.முருகன், பி.எம்.காதர்உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
  ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai