சுடச்சுட

    

    பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணி : பொதுமக்கள் பாதிப்பு

    By DIN  |   Published on : 09th December 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்வளையமாதேவி கிராமத்தில் சாலைப் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    புவனகிரி வட்டம், கீழ்வளையமாதேவியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் எஸ்.ஏசுராஜ். இவர் அண்மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் தெரிவித்துள்ளதாவது: கீழ்வளையமாதேவியில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகே உள்ள இடத்தை, ஆதிதிராவிடர் நலத் துறை விலைக்கு வாங்கியது. அப்போது, பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த பாதையையும் விலைக்கு வாங்கியதாகக் கூறப்பட்டது.
    இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சாலை அமைப்பதற்காக அப்பகுதியில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு பரப்பப்பட்டன.
    ஆனால், 7 மாதங்களாகியும் சாலை அமைக்கப்படாமல் ஜல்லிக் கற்கள் அப்படியே விடப்பட்டதால், அந்தச் சாலையை பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடனே பயன்படுத்த வேண்டியுள்ளது.
    இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே, பாதை அமைப்பதற்காக போடப்பட்ட இடத்தில் தார்ச் சாலை அமைக்க வேண்டும். இதனால், ஆதிதிராவிடர் நலத் துறை இடத்தில் பட்டா பெறுபவர்களும் பயன்பெற முடியும் என்று மனுவில் வலியுறுத்தி உள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai