சுடச்சுட

  

  அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட ஆட்சிக்குழு கூட்டம் அதன் தலைவர் ச.சிவராமன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
  கூட்டத்துக்கு மாவட்ட பிரதிநிதி கந்தசாமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் சி.ராமசாமி செயல் அறிக்கையும், பொருளாளர் சி.பக்கிரி வரவு-செலவு அறிக்கையும், சிதம்பரம் நகர தலைவர் ந.சிவக்குமார் புதிய ஓய்வூதியப் பலன்கள், இழப்புகள் தொடர்பாக மாநில அறிக்கையையும் வாசித்தனர்.
  கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதைப் போல ஓய்வூதியம், மருத்துவப் படிகள், பணப் பலன்களை 2016-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  நிர்வாகிகள் ராமசாமி, முல்லைநாதன், பச்சையப்பன், பழநிசாமி, ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக துணைத் தலைவர் தி.விவேகானந்தன் வரவேற்க, கி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai