சுடச்சுட

    

    உலக மண்வள தினத்தையொட்டி, குறிஞ்சிப்பாடியில் மண் பரிசோதனை குறித்த செயல்முறை விளக்க முகாம்  அண்மையில் நடைபெற்றது.
    திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் குறிஞ்சிப்பாடியில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள், உலக மண் வள தினத்தை முன்னிட்டு (டிச. 5), விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற முகாமில், மண் பரிசோதனை மற்றும் தென்னை நார்க் கழிவு தயாரித்தல் குறித்து குறிஞ்சிப்பாடியில் விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.
    வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவிப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai