சுடச்சுட

    

    மருத்துவமனைக்குச் சென்ற பெண் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ரமேஷ் (32). இவரது தங்கை கலாவதி (27). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், ஆண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் சபரிநாதன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    இதையடுத்து ரமேஷ், கலாவதியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைத்திருந்தார். வியாழக்கிழமை ரமேஷின் மனைவியுடன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்ற கலாவதி காணாமல்போனார். இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai