சுடச்சுட

    

    மின்னியல் கழிவுகளை தனியாகச் சேகரிக்க ஆட்சியரிடம் கோரிக்கை

    By DIN  |   Published on : 09th December 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்னியல் கழிவுகளை தனியாகச் சேகரித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    கடலூரில் பல்வேறு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் மா.சுதின்பாரதி, வி.விக்னேஷ், மா.சுகினாபாரதி, கீ.ர.சூர்யகுமார், த.க.கீர்த்திவாசன் ஆகியோர் இணைந்து பசுமை நண்பர்கள் துளிர் இல்லம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பினர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர். அப்போது, கடலூர் நகரில் மின்னியல் கழிவுகள் குறித்த விழிப்புணர்வு, மேலாண்மை குறித்த தலைப்பில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர்.
    இந்த ஆய்வறிக்கையை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அண்மையில் அனுப்பி வைத்து, அதனை அமல்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆய்வறிக்கைக்கான தகவல் சேகரிப்பின்போது கடலூர் நகராட்சியில் தெருக்களில் வீசப்படும் மின்னியல் கழிவுகள் தனியாக சேகரிக்கப்படாதது தெரியவந்தது. அவை மற்ற குப்பைகளோடு சேர்ந்தே குப்பைக் கிடங்கில் சேர்க்கப்படுகிறது. அங்கு குப்பைகள் எரிக்கப்படும்போது மின்னியல் கழிவுகளில் இருக்கும் மெர்குரி, காட்மியம், லெட் போன்றவை எரிந்து விஷ வாயுக்களை வெளிப்படுத்துகிறது.
    இதனால், சுற்றுப்புற மாசு, சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், மின்னியல் கழிவுகளை குப்பைகளோடு அப்படியே விடப்படும்போது அவை நிலத்தை மாசுப்படுத்துவதோடு நிலத்தடி நீரையும் மாசுப்படுத்துகிறது. எனவே, கடலூர் நகராட்சிக்கு உள்பட்ட இடங்களில் குப்பைகள் சேகரிக்கும்போது மின்னியல் கழிவுகளை தனியாக சேகரிப்பது தொடர்பாக, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் வலியுறுத்தி உள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai